
கோலாலம்பூர், நவ 8- உணவுகளை ஆர்டர் செய்யாமல் ஏர் கோன் எனப்படும் குளிரூட்டி அறைகளில் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவகங்களும் கடைகளும் ஒரு ரிங்கிட் கட்டணம் விதிப்பது குறித்து பலர் தங்களது மனக்குமுறலை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையிலே ஏர்கோன் பகுதியில் அமர்ந்ததற்காக தனக்குக் கட்டணம் விதிக்கப்பட்டதை வாடிக்கையாளர் ஒருவர் தனது X தளத்தில் பகிர்ந்திருந்தார்.
மற்ற நாடுகளில் வசதியாக உணவை உண்பதற்கு கூடுதல் செலவுகளைச் சேர்க்கும் நடைமுறை இப்போது நம் நாட்டிலும் அமல்படுத்துவது கவலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த பதிவு ஒரே நாளில் 521 ஆயிரம் பார்வைகளையும் பெற்று இருந்தாலும், ஏர்கோன்-காக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இந்த கலாச்சாரத்தை நம் நாட்டில் கொண்டு வருவதை நிறுத்துமாறு, வலைத்தளவாசிகள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.