
கோலாலம்பூர், செப்டம்பர்-3 – கோலாலம்பூர் பண்டார் தாசேக் செலாத்தானில் உள்ள நாட்டின் முதன்மை பேருந்து முனையமான TBS, அதன் முகப்பிடங்களில் அச்சிடப்படும் டிக்கெட்டுகளுக்கு தற்போது 70 சென் கட்டணம் விதிக்கிறது.
அந்த வசதிக் கட்டண வசூலிப்புக்கு APAD எனப்படும் தரை பொது போக்குவரத்து நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளதாக, ஃபேஸ்புக் பதிவில் TBS கூறியது.
இவ்வேளையில், டிக்கெட் முகப்பிடங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதைத் தவிர்க்க, இணையம் வாயிலாக QR குறியீட்டைக் கொண்ட டிஜிட்டல் பயணச் சீட்டுகளை வாங்குமாறும், பயணிகளை அது அறிவுறுத்தியது.
பேருந்து புறப்படும் இடம், கதவு உள்ளிட்ட எல்லா தகவல்களும் டிஜிட்டல் பயணச் சீட்டில் இடம் பெற்றுள்ளன.
அதனைப் பின்பற்றினாலே போதும்; டிக்கெட் முகப்புகளில் தகவல்களுக்குக் காத்திருக்க வேண்டியதில்லை என அது கூறிற்று.