Latestமலேசியா

முகேன் ராவ் நடித்த Jinn – The Pet படத்தின் பிரிமியர் காட்சிக்கு பெரும் வரவேற்பு

பெட்டாலிங் ஜெயா, மே-26 – பிக் பாஸ் புகழ் மலேசிய நடிகர் முகேன் ராவ் நடிப்பில் வெளியாகவுள்ள இரண்டாவது தமிழ்த் திரைப் படம் தான் Jinn – The Pet.

பேய் கற்பனைக் கதையான இப்படத்தில் அவருடன் பாவ்யா திரிக்கா கதாநாயகியாகவும், வடிவுக்கரசி, ராதாரவி, நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, பால சரவணன் உள்ளிட்டோர் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

டி.ஆர். பாலா எழுதி இயக்கியுள்ள இப்படம் Superlinks Picture வெளியீட்டில் மலேசியாவில் மே 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி நேற்று முன் தினம் LFS PJ State திரையரங்கில் இப்படத்தின் பிரீமியர் காட்சி நடைபெற்றது.

உள்ளூர் கலைஞர்களும் பிரபலங்களும் இதில் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்தப் படம் ஒரு திகில் நகைச்சுவைப் படமாகும்; முகேன் வீட்டிற்குள் ஒரு ஜின்னை எப்படி வளர்க்கிறார்,
இதனால் எழும் பிரச்னைகளை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்பதை நகைச்சுவையோடு இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதனிடையே,
‘மலேசியாவின் பெருமை’ முகேன் ராவ் கதாநாயகனாக நடிப்பதால், இப்படத்திற்கு உள்ளூர் இரசிகர்கள் பெரும் வரவேற்பளிப்பர் என, Superlinks Pictures நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.ஜி. நாய்டு நம்பிக்கைத் தெரிவித்தார்.

கற்பனைப் பேய்க் கதையை அனைவரும் இரசிக்கும்படியாக இயக்கியிருப்பதால், இப்படம் நிச்சயம் மலேசிய இரசிகர்களைத் திருப்தி படுத்துமென, இயக்குநர் டி.ஆர். பாலா உத்தரவாதமளித்தார்.

தமிழ் சினிமாவில் தான் கதாநாயகனாக நடிக்கும் இந்த இரண்டாவது படம், முதல் படத்தை விட வித்தியாசமான கதைக் களத்துடன் இருப்பதே சிறப்பு என, முகேன் ராவ் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

படத்தைப் பார்த்த உள்ளூர் பிரபலங்களும் முகேனின் நடிப்பையும் படத்தையும் வெகுவாக பாராட்டினர்.

குழந்தைகள் மற்றும் குடும்ப பொழுதுபோக்குப் படமான இந்த Jinn – The Pet படத்தை மே 30 முதல் உள்ளூர் திரையரங்குகளில் குடும்பத்தோடு சென்று கண்டு களியுங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!