Latestஉலகம்

முடிவுக்கு வந்த 20 ஆண்டு கால தொடர்பியல் புரட்சி; சேவையை நிறுத்திய Skype

நியூ யோர்க், மே-6, 20 ஆண்டுகளுக்கு முன் எல்லை கடந்த தொடர்புகளில் புதியப் புரட்சியை ஏற்படுத்திய, இணையம் வாயிலான தொலைப்பேசி மற்றும் வீடியோ அழைப்புச் சேவையான Skype, மே 5-ஆம் தேதியோடு மூடப்பட்டுள்ளது.

மைக்ரோசோஃப்ட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த படி, இன்று முதல் அது பயன்பாட்டில் இருக்காது.

Skype-யை, 8.5 பில்லியன் டாலரை ரொக்கமாகக் கொடுத்து வாங்கிய 14 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்ரோசோஃப்ட் மூடுகிறது.

என்றாலும், பயனர்கள் தங்களின் பல்வேறு தரவுகளை Microsoft Teams-க்கு மாற்ற 10 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Skype சேவை முடிவுக்கு வந்துள்ளதால், Microsoft Teams செயலியில் இனி அந்நிறுவனம் முழு கவனம் செலுத்த வாய்ப்பேற்பட்டுள்ளது.

ஈராயிரத்தாம் ஆண்டுகளின் மத்தியில் முக்கியத் தொடர்பு முறையாக இருந்தது இந்த Skype செயலியாகும்.

எனினும், அண்மைய ஆண்டுகளில் அதன் பிரபலம் மெல்ல சரியத் தொடங்கியது.

கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகமே முடங்கிய போது, தனது நேரெதிர் போட்டி செயலிகளான Zoom, Google Meet, Cisco Webex உள்ளிட்டவை படு பிரபலம் அடைந்தாலும், Skype தொடர்ந்து பின் தங்கியது.

கடந்த 15 ஆண்டுகளாக Apple நிறுவனத்தின் FaceTime, Meta-வின் WhatsApp போன்றவற்றின் வருகையாலும் Skype கடும் சவாலை எதிர்நோக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!