
சென்னை, செப்டம்பர்-23,
முன்னணி நடிகரும் கார் பந்தய ஆர்வலருமான அஜீத் குமார், முதன் முறையாக ஆசிய லீ மான்ஸ் (Asian Le Mans) தொடரில் பிரவேசிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும், தொடக்கப் பந்தயம் வரும் டிசம்பர் 12 முதல் 14 வரை நமது செப்பாங் அனைத்துலகப் பந்தயத் தளத்தில் நடைபெறுகிறது.
அஜீத்துடன், இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ஓட்டுனர் நரேன் கார்த்திகேயன் அதில் இணையவிருப்பது, இரசிகர்களின் ஆர்வத்தை மேலோங்கச் செய்துள்ளது.
இருவரும் Team Virage அணியின் கீழ் பந்தயத்தில் பங்கேற்கின்றனர்.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், இது நடந்தால் – இந்திய மோட்டார் விளையாட்டுத் துறைக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.
அதே சமயம், அனைத்துலக கார் பந்தய அரங்கில், முன்னணி வீரர்களின் வரிசையில் அஜீத்தை இது இடம் பெறச் செய்யும்.