
கோலாலம்பூர், ஜூன் 3 – 2025ஆம் ஆண்டு, முதல் காலாண்டில் இ.பி.எப். (EPF) சேமிப்பு தொகை, 18.31 பில்லியன் ரிங்கிட்டை எட்டிய நிலையில், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது அது 13 விழுக்காடு குறைவென EPF தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் சுல்கர்னைன் ஒன் (Ahmad Zulqarnain Onn) கூறியுள்ளார்.
ஏப்ரல் 2 ஆம் தேதி அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட கட்டண அறிவிப்பின்படி, அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள், முதல் காலாண்டு முழுவதும் முக்கிய மலேசிய பங்குச் சந்தைகளைப் பாதித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில், மலேசிய அரசாங்கப் பத்திரங்கள் உள்ளிட்ட நிலையான வருமான கருவிகள், நிலையான வருமானத்தை வழங்குதல் மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தை சமநிலைப்படுத்துதல் என்ற இரட்டை ஆணையை தொடர்ந்து நிறைவேற்றியுள்ளன.
மேலும், மலேசியா உட்பட உலகளாவிய வளர்ச்சி கணிப்புகளில் ஏற்பட்டுள்ள தரக் குறைப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புற அபாயங்களையும் பிரதிபலிக்கிறது என்று அஹ்மத் சுல்கர்னைன் மதிப்பாய்வில் தெரிவித்துள்ளார்.