Latestமலேசியா

முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் ஜைனுதீன் தனது 86வது வயதில் காலமானார்

கோலாலம்பூர், நவ 13 – முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடின் ( Daim Zainudin ) காலமானார். 86 வயதான அவர் இன்று காலையில் இறந்ததை அவரது வழக்கறிஞர் குர்டியல் சிங் நிஜார் (Datuk Dr Gurdial Singh Nijar) உறுதிப்படுத்தினார். இரண்டு வாரக்களுக்கு முன் டைய்ம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பெர்னாமா தகவல் வெளியிட்டது. அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும்.

டைய்ம் இரண்டு முறை நிதியமைச்சராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான நிர்வாகத்தில் முதல் முறையாக 1984ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட காலக்கட்டத்தில் 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலும் டைய்ம் நிதியமைச்சராக இருந்துள்ளார். தனது பதவிக் காலத்தில் மலேசியாவின் பொருளாதாரம் துரித வளர்ச்சி அடைவதற்கான பல்வேறு செயல் திட்டங்கள் மற்றும் சீரமைப்புகளை அமல்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

சொத்து தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சியின் அறிக்கைக்கு பதில் தரத் தவறியதற்காக டைய்ம் மற்றும் அவரது மனைவி நைய்மா காலிட் ( Naima Khalid ) மீது இவ்வாண்டு தொடக்கத்தில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. சிலாங்கூர்,நெகிரி செம்பிலான், பஹாங், கெடா மற்றும் கோலாலம்பூரில் தனக்கு சொந்தமான 38 நிறுவனங்கள் , 19 நில உரிமம் மற்றும் இதர ஆறு சொத்துக்கள் குறித்து அறிவிக்கத் தவறியதாக டைய்ம் மீது குற்றச்சாம்டை எதிர்நோக்கியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!