
கோலாலம்பூர், ஜன 6 – வீட்டில் கீழே விழுந்ததைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தேசிய இருதய சிகிச்சை மையமான IJNனில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து 100 வயதுடைய மகாதீர் மருத்துவரின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை பெற்றுவருவதாக அவரது அலுவலகத்தின் உதவியாளர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, துன் மகாதீர் தற்போது சீராகவும் சுயநினைவுடனும் இருந்து வரும் நிலையில் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



