
புத்ராஜெயா அக்டோபர் 2 – அக்டோபர் 15 முதல் முழுநேர ஈ–ஹெய்லிங் ஓட்டுநர்களும் BUDI MADANI RON95 (BUDI95) எரிபொருள் மானியத்திற்குத் தகுதியானவர்கள் என நிதியமைச்சு (MOF) அறிவித்துள்ளது.
விண்ணப்பம் தனிப்பட்ட முறையில் செய்ய தேவையில்லை என்றும் அரசு ஈ–ஹெய்லிங் நிறுவனங்களுடன் நேரடியாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், செல்லுபடியாகும் உரிமம் இல்லாவிட்டாலும், பதிவு செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என்று தெரிவுக்கப்பட்டது.
இதற்காக சம்பந்தப்பட்ட மாநில முகமைகளுடன் அரசு இணைந்து பணிபுரிகின்ற நிலையில்
ஒவ்வொரு தகுதியான நபருக்கும் மாதம் 300 லிட்டர் RON95 மானியம் வழங்கப்படும்.
இதுவரை, திட்டம் தொடங்கிய 27 செப்டம்பரிலிருந்து, மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்தி, 128.4 மில்லியன் லிட்டர் RON95 விற்பனை செய்யப்பட்டு, 67 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் மக்கள் வாழ்வாதாரச் சுமையை குறைக்கும் வகையில் தொடர்ந்து வழங்கப்படுமென்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மொத்தம் 16 மில்லியன் மலேசியர்கள் RON95–ஐ லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையில், மாதம் 300 லிட்டர் வரை பெற தகுதியானவர்கள் என்று அறியப்படுகின்றது.