Latestமலேசியா

முழுமையடையாத ஜாலோர் கெமிலாங் விவகாரம் சாதாரண விஷயம் அல்ல – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஏப் 18 – நிறுவனத்தின் ஆவணத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோலியம் சரவாக் பெர்ஹாட்டிடம் (Petroleum Sarawak Bhd) கசியவிட்டதாக பெட்ரோனஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி மறுத்துள்ளார்.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சித்தி ஷக்கிரா மொதாருடின் ( Siti Shakirah Mohtarudin ) முன்னிலையில் 40 வயதுடைய கைருல் அக்மால் ஜஸ்னி (Khairul Akmal Jasni ) மீது இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. பெட்ரோனாஸில் வணிகப் பிரிவு செயல்திறன் மேலாளராக தனது கடமைகளின் போது பெறப்பட்ட “2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வணிக செயல்திறன் செயல்பாட்டு மற்றும் நிதி” என்ற ஆவணத்தை Petros சுக்கு கசியவிட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி மாலை மணி மணி 3.19 முதல் மணி முதல் மாலை மணி 3.21 வரை டாங் வாங்கி, ஜாலான் பினாங்கில் உள்ள B-6-10, மார்க் சர்வீஸ் ரெசிடென்ஸில்                    ( Marc Service Residence ) இந்தக் குற்றத்தை கைருல் புரிந்ததாக கூறப்பட்டது.

தனது கடமைகளைச் செய்தபோது பெறப்பட்ட தகவல்களை வெளியிட முயற்சித்ததாக கைருல் மீது தண்டனைச் சட்டத்தின் 203 ( 1) இன் பிரிவுடன் சேர்த்துப் படிக்கப்பட்ட                    பிரிவு 511 இன் கீழ் Khairul மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு குறைந்தபட்சம் 1 மில்லியன் ரிங்கிட் அபராதம், ஒரு ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 20,0000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு மே மாதம் 19ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!