Latestமலேசியா

முஹிடினுக்கு எதிரான நிந்தனை குற்றச்சாட்டு ஜனவரி 15இல் மறுவாசிப்புக்கு செவிமடுப்பு

குவா மூசாங், நவ 4 – பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கடந்த ஆகஸ்டு மாதம் Felda Perasuவில் நிந்தனை அம்சங்களுடன் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டு எதிர்வரும் ஜனவரி 15 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த வழக்கை கோத்தா பாரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென முஹிடின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நிக் முகமட் தார்மிஷி நிக் முகமட் சுக்ரி ( Nik Mohd Tarmizie Nik Mohd Shukri ) மறுவாசிப்புக்கான புதிய தேதியை நிர்ணயித்தார்.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கையில் முஹிடின் சார்பில் அமிர் ஹம்சா அர்ஷாட் ( Amer Hamzha Arsha ) தலைமையில் ஆறு வழக்கறிஞர்கள் ஆஜராகிய வேளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் Azlina Rasdi தலைமையில் ஐவர் ஆஜராகினர்.

பேரரசர் பிரதமரை நியமித்தது உள்ளிட்ட முக்கியமான சட்டங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் , வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தங்களது தரப்பு கோரிக்கை விடுத்ததாக முஹிடின் தரப்பின் வழக்கறிஞர் அமிர் ஹம்சா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!