Latestஉலகம்

நியூ யோர்க்கிலிருந்து லண்டன் வெறும் 1 மணி நேரத்திலா? கடலுக்கடியில் சுரங்கப் பாதை அமைக்க இலோன் மாஸ் திட்டம்

வாஷிங்டன், டிசம்பர்-20 – உலகின் பெரும் கோடீஸ்வரரான இலோன் மாஸ்க் தனது அடுத்த அதிரடியாக, அமெரிக்கா நியூ யோர்க்கிலிருந்து பிரிட்டனின் லண்டனுக்கு வெறும் 1 மணி நேரத்தில் பயணம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அக்கனவுத் திட்டத்தைச் சாத்தியமாக்க, தனது The Boring Company நிறுவனம் வாயிலாக கடலுக்கு அடியில் 20 பில்லியன் டாலர் செலவில் சுரங்கப் பாதைகளை அமைக்க அவர் எண்ணியுள்ளார்.

அட்லாண்டிக் கடலுக்கடியில் 4,800 கிலோ மீட்டர் நீளத்தில் சுரங்கப் பாதையை அமைத்து, அதில் அதிவிரைவு இரயில்களை இயக்கி, அமெரிக்கா – பிரிட்டன் இடையிலான பயண நேரத்தை வெறும் 1 மணி நேரமாகக் குறைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

நடப்பில் அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு விமானத்தில் செல்ல 8 மணி நேரங்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சுரங்கப் பாதைகளை அமைப்பது இலோன் மாஸ்கின் நீண்ட காலத் திட்டமாகும்; ஆனால் அதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தில் அத்திட்டத்தை அவர் கிடப்பில் போட்டிருந்தார்.

ஆனால், அவரின் The Boring Company நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளதால், கனவுத் திட்டத்தை மாஸ்க் திரும்பவும் தூசி தட்டுகிறார்.

ஒருவேளை சாத்தியமானால் மனித போக்குவரத்தில் அதுவொரு புரட்சிகமான நடவடிக்கையாக இருக்கும்.

என்றாலும், அட்லாண்டிக் கடலுக்கு அடியில் அத்தனை தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைப்பதென்பது பெரும் சவாலானது என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தவிர, கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படலாமென அவர்கள் எச்சரிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!