
கோத்தா பாரு, அக் 3 – செப்டம்பர் 26 ஆம் தேதி Cherang Rukuவில் மூன்று ஆடவர்கள் கடத்தப்பட்டதன் தொடர்பில் ஒரு பெண் உட்பட 8 நபர்களை கிளந்தான் போலீசார் கைது செய்தனர்.
20 முதல் 46 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் கோத்தாபாரு , Bachok, Pasir Puteh மற்றும் Tumpat ஆகிய ஆறு இடங்களில் அதிகாலை 2 மணி முதல் காலை மணி 11.30 வரை கிளந்தான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் குழு மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னதாக , சந்தேக நபர் 20 வயதுடைய அனைத்து ஆண்களையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அவர்களை விடுவிக்க பாதிக்கப்பட்டவர்களின் முதலாளிகளிடமிருந்து 150,000 ரிங்கிட் பிணைப்பணம் கோரியதோடு புகார்தாரர் 29,000 ரிங்கிட்டை ஒப்படைத்தாகவும் கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ Mohd Yusoff Mamat தெரிவித்தார்.
இந்த கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டதன் விளைவாக சந்தேக நபர்களுக்கு சொந்தமான 10 கைதொலைபேசிகள் , பாதிக்கப்பட்டர்க மூவரின் 6 கைதொலைபேசிகள் , ஒரு Proton Perdana கார், Audi Q7 கார் மற்றும் Nissan Terrano வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வெளியிட் அறிக்கையில் Mohd Yusoff குறிப்பிட்டார் .
மேலும் ஒரு துப்பாக்கி, மற்றும் போலி துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது