
மெக்சிக்கோ சிட்டி , டிச 29 – மெக்சிக்கோவில் ஞாயிற்றுக்கிழமையன்று 250 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் 13 பேர் மரணம் அடைந்த வேளையில் 98 பயணிகள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்சிக்கோவின் தென் மாநிலமான Oaxaca வில் பயணச் சேவையில் ஈடுபட்டிருந்த அந்த ரயிலின் இயந்திரப் பகுதி தண்டவாளத்திலிருந்து தனியாக கழன்றது.
தொடக்கத்தில் இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாகவும் சில மணி நேரங்கள் கழித்து 98 பேர் காயம் அடைந்ததோடு இதர 13 பயணிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உடனடியாக உதவும்படி அதிகாரிகளை மெக்சிக்கோ அதிபர் Claudia Sheinbaum பணித்துள்ளார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்குவதாக அந்நாட்டின் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் மெக்சிக்கோ வளைகுடாவிற்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் சேவையை மேற்கொண்டு வருவதோடு , பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்கிறது.
தென்கிழக்கு மெக்சிகோவை மேம்படுத்துவதற்காக அப்போதைய அதிபர் Andres Manuel Lopez obradorரின் கீழ் ஒரு பெரிய உள்கட்டமைப்பு திட்டமாக இந்த ரயில் தண்டவாளம் 2023 இல் திறக்கப்பட்டது.



