
கோலாலம்பூர் செப்டம்பர் 22 – ‘மலாயன் பாங்கிங் பெர்ஹாட்’ (Maybank) தனது பெயர் மெர்டேகா 118 கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்டது என்ற தகவலை முற்றிலும் பொய்யானது என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘MAY’ பகுதி மட்டுமே தற்போது பொருத்தப்பட்டுள்ளது என்றும் ‘BANK’ என்ற சொல் இன்னும் நிறுவப்படவில்லை என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் Maybank விளக்கமளித்தது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் காணொலிகளில் வங்கியின் சின்னம் அகற்றப்பட்டத்தை போன்று காணப்பட்டதால் வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் விவாதங்களை ஏற்படுத்தின.
சிலர் இதை “வர்த்தகமயமாக்கல்” என கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து மேலும் சிலர் Maybank பெயர் நிறுவப்படாததால் கட்டிடத்தின் அடையாளமும் முக்கியத்துவமும் பாதிக்கப்படாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஜாலான் துன் பேராக் பகுதியில் உள்ள மெனாரா மேபாங்க் தலைமையகத்திலிருந்து, மெர்டேகா 118க்கு வங்கி தலைமையகம் மாற்றப்படவுள்ளதாகவும், 21 ஆண்டுகள் வரை வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.