
கோலாலம்பூர், ஆக 8 – தெற்கு நோக்கிச் செல்லும் Serdang Lay-byஇல் உள்ள 308.20 ஆவது கிலோமீட்டரில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை இரவு முழுவதும் concrete நடைபாதை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று Plus மலேசியா Berhad இன்று தெரிவித்துள்ளது.
ஐந்து நாள் காலகட்டத்தில், லே-பையில் உள்ள நுழைவுப் பாதை, உணவுக் கடைகள் மற்றும் ஓய்வறைகள் தற்காலிகமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செயல்படாது.
இடையூறுகளைக் குறைக்க, மேம்படுத்தல் பணிகள் எதுவும் நடைபெறாதபோது, தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை லே-பை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படும்.
நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மற்றும் பயனர் வசதியை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக Plus நெடுஞ்சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் பயணத்தை Plus செயலியைப் பயன்படுத்தி திட்டமிடவும், போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் on-site வழிமுறைகளுக்கு இணங்கவும் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Putri மெய்நிகர் உதவியாளர், X@plustrafik செயலி, மின்னணு அடையாள பலகைகள் மற்றும் பிளஸ் லைன் மூலம் போக்குவரத்து தொடர்பான விவரங்களை வாகன ஓட்டுனர்கள் பெறலாம்.