
பாரிஸ் , டிச 3 – ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus, உலகளவில் அதன் பிரபலமான A320 விமானங்களில் 628 வரை உலோக தகடு தரப் பிரச்னையைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதாக கூறியது.
628 எண்ணிக்கை பாதிக்கப்படக்கூடிய மொத்த விமானங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது என்றாலும் , அனைத்து விமானங்களிலும் சிக்கல் இருப்பதாக அர்த்தமல்ல என்றும் AFP செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் Airbus தெரிவித்துள்ளது.
எந்த விமானங்களுக்கு குறிப்பிட்ட நடவடிக்கை தேவை என்பதை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்படும்போது திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக Airbus சுட்டிக்காட்டியது.
Airbus விமானத்தின் உடற்பகுதி panelகளில் ஏற்பட்டுள்ள தரப் பிரச்னை காரணமாக சில A320 விமானங்களின் விநியோகம் தாமதமாகியுள்ளதாக வந்த செய்தியால், அதன் பங்குகள் சரிந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, மென்பொருள் மேம்படுத்தல் மேற்கொள்ளப்படும் வரை சுமார் 6,000 A320 விமானங்கள் மீண்டும் பறக்கக்கூடாது என்று Airbus கடந்த வாரம் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய சிக்கல் குறித்த அறிக்கை வந்துள்ளது.



