
ஜெம்போல், டிசம்பர்-14 – நெகிரி செம்பிலான், ஜெம்போலில் மோட்டார் சைக்கிள் தடம்புரண்டு மரத்தில் மோதியதில், முறையே 13, 10 வயது சிறார்கள் இருவர் பலியாயினர்.
இன்னொருவர் படுகாயமுற்றார்.
நேற்று மாலை 6 மணியளவில் Jalan Taman Musytari-யில் இவ்விபத்து நிகழ்ந்தது.
Taman Mawar-ரிலிருந்து Taman Musytari-க்கு Honda C100 மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் அச்சம்பவம் நிகழ்ந்தது போலீஸின் தொடக்கக் கட்ட விசரணையில் தெரிய வந்துள்ளது.
திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாகக் கவிழ்ந்து பின்னர் மரத்தில் மோதியது.
அதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 13 வயது பெண் பிள்ளையும், நடுவில் அமர்ந்திருந்த 10 வயது சிறாருமே கொல்லப்பட்டனர்.
பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு 13 வயது சிறுமி தலையில் படுகாயம் அடைந்ததோடு, அவரின் இரு கால்களின் எலும்புகளும் முறிந்தன.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு உதவுமாறு ஜெம்போல் போலீஸ் கேட்டுக் கொண்டது.



