
கோலாலம்பூர், மார்ச் 21- ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A வின்னேஸ்வரன் தலைமையில் நேற்று நேதாஜி மண்டபதில் நோன்பு துறப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நம் நாட்டின் முன்னேற்றத்திலும் வரலாற்றிலும் முக்கிய பங்காற்றியிருக்கும் இந்திய முஸ்லீம் சகோதரர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதோடு நன்றி கூற கடைமைப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்திய முஸ்லீம் சமூகத்தின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவற்கான கடப்பாட்டை ம.இ.கா எப்போதும் கொண்டுள்ளதோடு நாட்டின் வளர்ச்சியின் தேசிய நீரோட்டத்தில் அவர்களுக்கான நியாயமான வாய்ப்புக்கள் கிடைப்பதையும் ம.இ.கா உறுதிப்படுத்தும்.
புனித நோன்பு மாதத்தில் நடைபெறும் இந்த நோன்பு துறக்கும் நிகழ்வு ஒற்றுமை, ஐக்கியம் மற்றும் நம்மிடையே குடும்ப உணர்வு தொடர்ந்து வலுவுடன் திகழ்வதற்கான ஒரு அடையாளமாகவும் விளங்குகிறது.
முஸ்லீம் சகோதரர்களின் கருத்துக்களை நான் மிகவும் மதிப்பதோடு தனது மக்களின் தேவையை உண்மையான தலைவர்கள் எப்போதும் காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதோடு அதனை புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ளேன்.
எனவே இந்த நோன்பு மாதம் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும் என்பதோடு நம்மிடையே இருந்துவரும் சகோதார உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்று தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் விக்னேஸவரன் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ம.இ,காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், உதவித் தலைவர்களான டத்தோ டி.முருகையா, டான்ஸ்ரீ ராமசாமி, டத்தோ நெல்சன் ரெங்கநாதன், எச்.எர் டி.கோப் தலைமை இயக்குனநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத், மேலவை உறுப்பினர் டான்ஸ்ரீ ஹனிபா, ஆர்.டி.எம் முன்னாள் அறிவிப்பாளர்களான அசன் கனி , நாச்சியா மஜித் ,கம்பம் பீர் முகமது, உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.