
புத்ராஜெயா, ஜூலை-21- தனது முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி யூசோஃப் ராவுத்தர் 2021-ஆம் ஆண்டு தமக்கெதிராகத் தொடுத்த பாலியல் தாக்குதல் சிவில் வழக்கை ஒத்தி வைப்பதில், பிரதர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றிப் பெற்றுள்ளார்.
“சிறப்பு சூழ்நிலைகளைக்” கொண்டிருப்பதால் அவ்வழக்கைத் தற்காலிகமாக ஒத்தி வைக்க புத்ராஜெயா மேல்முறையீடு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அதிகாரத்திலிருக்கும் பிரதமருக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர முடியுமா என, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் அன்வார் எழுப்பிய 8 கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க முன்னதாக உயர்நீதிமன்றம் மறுத்திருந்தது.
அதனை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அன்வார் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதன் தீர்ப்பு வரும் வரை இவ்வழக்கை ஒத்தி வைக்க மூவர் கொண்ட நீதிபதிகள் குழு அனுமதி வழங்கியுள்ளது.
அன்வாரின் அந்த மேல்முறையீடு செப்டம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.