
கோலாலங்காட், மே 5 – பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஷி ரம்லி விமுமுறையில் சென்றதில் தனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். சில நாட்கள்தான் அவர் விடுமுறையில் இருக்கிறார். அவர் விடுமுறையை எடுத்துக் கொள்ளட்டும்.
இதில் எந்தவொரு விவகாரம் அல்லது பிரச்னை இல்லையென பண்டார் சவ்ஜனா புத்ரா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்துகொண்ட பின் அன்வார் இதனை தெரிவித்தார்.
ரபிஷி அமைச்சரவையிருந்து விலகிவிட்டதாக ஆருடங்கள் வெளியானதை தொடர்ந்து அவர் விடுமுறையில சென்றுள்ளதாக இதற்கு முன் தகவல்கள் வெளியானது.
ரபிஷி விடுமுறையில் இருப்பதாக அமைச்சரவையிடம் அன்வார் தெரிவித்திருப்பதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒருவர் விடுமுறையை எடுத்துக்கொள்வதற்கு அனுமதித்தால்கூட கேள்வி எழுப்ப வேண்டுமா என அன்வார் செய்தியாளர்களிடம் வினவினார்.
எனக்குக்கூட சில நாட்கள் விடுமுறை வேண்டும். நான் இன்னும் விடுமுறை எடுக்கவில்லை. ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்குப் பின் சில நாட்கள் விடுமுறையை எடுத்துக்கொள்ளப்போவதாக அன்வார் கூறினார்