
பூச்சோங், மார்ச்-19-புனித ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நாம் இருக்கும் நிலையில், Telus Malaysia-வும் வணக்கம் மலேசியாவும், பூச்சோங்கில் உள்ள ‘Pertubuhan Kebajikan dan Bimbingan At Taqwa’ காப்பகத்தில் வசிக்கும் சுமார் 30 பேருடன், நோன்புத் துறப்பை அனுசரித்து, ரமலான் உணர்வை மேலோங்கச் செய்தன.
Telus Malaysia மற்றும் Vanakkam Malaysia நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான தியாகராஜன் முத்துசாமி, செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன், தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் ரமேஷ் பத்மநாபன், Telus Malaysia விளம்பரப் பிரிவுத் தலைவர் ஜெகநாதன் பழனிசாமி, சந்தைப் பிரிவி அதிகாதி கோபாலகிருஸ்ணன், Telus Malaysia-வின் மூத்த செய்தியாசிரியர் Faris Daniel உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
SunShine கல்விக் குழும நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான Dr R.V. ஷாம் பிரசாத்தும் வருகைபுரிந்திருந்தார்.
நேற்றிரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, வெறும் CSR முயற்சியாக மட்டுமல்லாமல், ஊடகவியலாளர்கள் சமூகத்தில் தேவையுள்ளவர்களை அணுகி, சமூக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமைந்தது.
இது, மனிதநேய மதிப்புகளையும், ஒன்றுபட்ட உணர்வையும் வளர்க்கும் தங்களின் கடப்பாட்டை பிரதிபலிப்பதாக, Telus Malaysia மற்றும் Vanakkam Malaysia நிறுவனங்களின் செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன் கூறினார்.
இம்முயற்சிக்கு Alzara Food Sdn Bhd, Enrico Group, Jasmine Rice, Sunshine Education Group ஆகியவற்றோடு Telus Malaysia-வும் ஆதரவு அளித்தது.
புனித ரமலான் மாதத்தில், உழைப்பின் பலனையும் வளத்தையும் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வது மிகப் பெரிய அர்த்தம் கொண்டது என Alzara Foods Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Mohd Yazid Manap கூறினார்.
பெருநாள் குதூகலங்களில், பேறுகுறைந்தோரையும் மறக்காமல், இதுபோன்று உபசரிப்பது அவர்களிடையே மகிழ்வை ஏற்படுத்தும்; அவ்வகையில், குழந்தைகள் முகத்தில் புன்னகையை ஏற்படுத்திய Telus Malaysia, வணக்கம் மலேசியாவுக்கு, காப்பகத்தின் இணை நிறுவனரான Amran Khalid நன்றித் தெரிவித்தார்..
குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளில், அரிசி, பால் மாவு, நெய், தேநீர், ஹரி ராயா பலகாரங்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வைக்கப்பட்ட கூடைகளும் அடங்கும்.
இஃப்தார் நோன்புத் துறப்புடன், பெருநாள் அன்பளிப்பாக ‘அங் பாவ்’ வழங்கப்பட்டது குழந்தைகளை ஆனந்தமடையச் செய்தது.
அந்த மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்…
Telus Malaysia, வணக்கம் மலேசியாவின் இந்த முன்னெடுப்பு, அன்பையும் மனிதநேயத்தையும் பகிர்ந்து, சமூக உறவை வலுப்படுத்திய சிறந்த முயற்சியாக அமைந்தது…



