
ஷா ஆலாம், ஜனவரி-20 – தரையில் ஓங்கி அடித்து 2 மாதக் கைக்குழந்தையின் மரணத்திற்கு காரணமானதை ஒப்புக்கொண்ட தந்தைக்கு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இச்சம்பவம் 2022 ஜூலை மாதத்தில், ரவாங், தாசேக் புத்ரியில் உள்ள வீட்டில் ஒரு குடும்பத் தகராறின் போது நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் மன உளைச்சலுக்கு ஆளான Danial Iman Sharif, குழந்தையை ‘பலிகடா’ ஆக்கினார்.
ஆனால் குழந்தை கதறி அழுத போது, கட்டிலிலிருந்து விழுந்து மேசையில் உதடு மோதி அடி பட்டு விட்டதாக பொய்க் கூறி சமாளித்துள்ளார்.
எனினும், மருத்துவ அறிக்கையின்படி, குழந்தை தலைக்காயங்களால் குறிப்பாக தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தது அம்பலமானது.
இந்நிலையில், சிறைத் தண்டனை, Daniel கைதுச் செய்யப்பட்ட 2022 ஜூலையிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்.



