
ரவாங், ஜனவரி-11 – ரவாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து–லாரி விபத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
42 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து, 3 டன் லாரியுடன் மோதியதில், லாரி ஓட்டுநர் மற்றும் 4 பேருந்து பயணிகள் சிக்கிக் கொண்டனர்.
38 பயணிகள் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.
சம்பவ இடம் விரைந்த மீட்புக் குழுவினர் 3 பயணிகளையும் லாரி ஓட்டுநரையும் வெளியேற்றினர்.
ஆனால், ஒரு பேருந்து பயணி இன்னும் வாகனத்திற்குள் சிக்கியுள்ளதால், தீயணைப்பு வீரர்கள் கனரக கருவிகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்தால் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகனமோட்டிகள் கவனமாக செல்ல வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



