ரவாங், டிசம்பர்-10, சிலாங்கூரில், Rawang Bypass எனப்படும் ரவாங் புறவழிச்சாலையிலிருந்து வெளியேறும் பகுதியில் நேற்று காலை அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்து வந்துசேர்ந்த 10 தீயணைப்பு-மீட்புப் படை வீரர்கள் சடலத்தை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.
அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நூர் அரிஃபின் மொஹமட் நாசிர் (Noor Ariffin Mohd Nasir) தெரிவித்தார்.
சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான முழு அறிக்கை பின்னர் வெயிடப்படுமென அவர் சொன்னார்.