
மெர்லிமாவ், மார்ச்-24-ஹரி ராயா கொண்டாட்டம் தொடர்பான ஒரு சமூக ஊடகப் பதிவில் LGBT கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அம்சங்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Threads பதிவில், ஒரே மாதிரியான இளஞ்சிவப்பு உடையில் பெண் தன்மை கொண்டவர் உட்பட இரண்டு ஆண்கள் “Jodoh Lebaran Dah Tiba” என்ற வாசகத்துடன் மிகவும் நெருக்கத்துடன் காணப்பட்டனர்.
இது பொது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெர்லிமாவ், கம்போங் பத்து காஜா எனுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் உண்மையா, எங்கு நடந்தது என்பதைக் கண்டறிய உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Rahmat Mariman கூறினார்.
விசாரணை முடிவின் அடிப்படையிலேயே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.



