
ரெம்பாவ், டிசம்பர் 19-நெகிரி செம்பிலான், ரெம்பாவில் காலி வீட்டொன்றின் பின்புறத்தில், பையினுள் வைத்து புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பெடாஸ், கம்போங் பத்து அம்பாட்டில் மீட்கப்பட்ட அச்சடலம், சிலாங்கூர் அம்பாங்கில் அண்மையில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மாநில போலீஸ் தலைவர் டத்தோ Alzafny Ahmad அதனை உறுதிப்படுத்தினார்.
ரெம்பாவில் கிடைக்கப் பெற்ற ஒரு புகாரின் அடிப்படையில் ஜாலான் பெடாஸ் – லிங்கியில் உள்ள அவ்வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக Alzafny தெரிவித்தார்.
சவப்பரிசோதனை இன்று நடைபெறும்.
இந்நிலையில் விசாரணை திறக்கப்பட்டு கொலையாளி தீவிரமாகத் தேடப்படுகிறார்.
53 வயது Suri Narudin எனும் மாதுவை டிசம்பர் 8 முதல் காணவில்லை எனக் கூறி முன்னதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து பொது மக்களும் தகவல் கொடுத்து உதவுமாறு போலீஸ் கேட்டிருந்த நிலையில், சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



