
ரொம்பின், டிசம்பர்-3 – பஹாங்கில் முதியத் தம்பதி பயணம் செய்த கார் ரொம்பின் ஆற்றில் விழுந்ததில், இருவரும் நீரில் மூழ்கி மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குவாலா ரொம்பின், கம்போங் ரந்தாவ் பாஞ்சாங் அருகே நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து ரொம்பின் தீயணைப்பு – மீட்புத் துறையைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடம் விரைந்தனர்.
ஆற்றின் ஆழம் 3 மீட்டர் என்பதாலும், நீர்பெருக்கால் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாலும், தொடக்கக் கட்டமாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நீரின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் காரைத் தேடுவதற்காக முக்குளிப்பு வீரர்கள் இறங்கிய போதும் காரும் அத்தம்பதியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆற்றில் நீரோட்டமும் வேகமாக இருப்பது மீட்புப் பணிகளுக்கு சவால உள்ளது.
இந்நிலையில் பெக்கான் தீயணைப்பு நிலையத்தின் உதவியும் கோரப்பட்டு உள்ளது.
காணாமல் போன தம்பதியின் அடையாளங்களும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.



