
லங்காவி, ஜனவரி-17 – கெடா, லங்காவியில் 4 நண்பர்களின் உல்லாசப் பயணம் துயரத்தில் முடிந்துள்ளது.
Lubuk Semilang பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சியில் இதர மூவருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது Hafiz Zaini, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீந்திக் கொண்டிருந்த நண்பரில் ஒருவர் நீரில் சிக்கியதை கண்டு Hafiz காப்பாற்ற முயன்றார்.
ஆனால், Hafiz-க்கே நீந்தத் தெரியாததால் அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
ஏற்கனவே நீரில் சிக்கியவரை மற்ற நண்பர்கள் காப்பாற்றினர்.
ஆனால் Hafiz காணாமல் போனார்.
பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் Hafiz-சின் உடலை பாறைகளுக்கிடையில் சிக்கிய நிலையில் கண்டுபிடித்தனர்.
சடலம், சவப்பரிசோதனைக்காக லங்காவி சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது..



