Latestமலேசியா

லாபு, கிர்பியில் 9 வீடுகள் தீக்கிரை; ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM3,000 நிதி & விலை மலிவான வீடு உதவி

லாபு, டிசம்பர் 24-இன்று காலை, நெகிரி செம்பிலான், லாபு, கிர்பி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முழுமையாக எரிந்துபோயின.

தகவலறிந்த மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹசான் பிற்பகலில் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM3,000 நிதி உதவி வழங்கினார்.

அவருடன், ஆட்சிக் குழு உறுப்பினர் J. அருள் குமாரும் சென்றார்.

அதே நேரத்தில், வீடுகளை இழந்த 7 குடும்பங்களுக்கு, லாபுவில் அமைந்துள்ள தாமான் பக்தி YNS பகுதியில் 80,000 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘வாங்கும் சக்திக்குட்பட்ட’ டைப் A வீடுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் பெற முடியாதவர்களுக்கு, அரசு ‘Skim Jual Beli’ திட்டத்தின் கீழ் சிறப்பு கடன் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என அருள் குமார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!