லாஹாட் டத்து, அக்டோபர்-25 – சபா, லாஹாட் டத்துவில் ஒரு மாட்டையே அடித்துக் கொன்ற 250 கிலோ எடை கொண்ட முதலை, வனவிலங்குத் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது.
ஃபெல்டா சாஹாபாட், புளோக் 25-ல் உள்ள செம்பனைத் தோட்டத்தில் 4 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலையின் நடமாட்டத்தைக் கண்டு கிராம மக்கள் புகார் கொடுத்தனர்.
அதுவும் அண்மையில் ஒரு மாட்டையே அம்முதலை இரையாக்கியதால், வெளியில் செல்லவே கிராம மக்கள் தயங்கி வந்தனர்.
இதையடுத்து வேட்டையில் இறங்கிய வனவிலங்குத் துறையினர், செம்பனைத் தோட்டத்திலிருந்த குட்டி ஆற்றில் அம்முதலையைக் கண்டதுமே அதை சுட்டு வீழ்த்தினர்.
மிகவும் பெரியதாக இருந்ததால் மண்வாரி இயந்திரத்தை கொண்டே அதனை அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.
பின்னர் பெரியக் குழியில் அது புதைக்கப்பட்டது.