லெபனான், செப்டம்பர் 19 – லெபனான் நாட்டில் நேற்று நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் சமயத்தில், அதன் தொடர்ச்சியாக கையடக்க ரேடியோ வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
முதல் அலையில் பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் இரண்டு சிறுமி உட்பட 12 பேர் வரை உயிரிழந்ததுடன், 3,000 பேர் வரை படுகாயமடைந்தாக, அந்நாட்டு சுகாதார அமைச்சு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தமுறை லெபனான் நாட்டின் போராளி அமைப்பான ஹிஸ்புல்லா பயன்படுத்திய கையடக்க ரேடியோக்களின் வெடிப்பால் நாடு அதிர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன், 450 பேர் காயமடைந்துள்ளனர்.