Latestமலேசியா

லோரியின் சரக்கு ஏற்றும் பகுதியை கீழே இறக்காமல் அதனை ஓட்டிச்சென்ற லோரி பறிமுதல்; ஓட்டுநரும் கைது

பொந்தியான், டிச 6 – லோரியின் சரக்கு ஏற்றும் பகுதியை கீழே இறக்காமல் அதனை ஓட்டிச்சென்ற லோரி பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

நேற்று மதியம் மணி 2.50 அளவில் Pontian Pekan Nenas சாலை எச்சரிக்கை விளக்கையும் , மின் இணைப்பையும் அந்த லோரி ஓட்டுநர் மோதியதைத் தொடர்ந்து அந்த லோரி பறிமுதல் செய்யப்பட்டதை Pontian மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ஹட்சரட் உசேய்ன் மியோன் ( Hadzrat Hussein Mion Hussain ) தெரிவித்தார்.

இது தொடர்பான ஒரு நிமிடம் ,15 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது .

Pontian னிலிருந்து Pekan Nenasசிற்கு 53 வயதுடைய ஆடவர் அந்த லோரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அந்த லோரியின் முதலாளி மற்றும் ஓட்டுநரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் போதைப் பொருள் எதனையும் பயன்படுத்தவில்லை என்பது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த விவகாரம் 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 43 ஆவது பிரிவு (1) இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Hadzrat தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!