
கோலாலம்பூர், நவம்பர்-2,
ஒரு மாணவி வகுப்பின் போது டிக்டோக்கில் நேரலை செய்த சம்பவம் வைரலாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த நேரலையின் scrinshot படத்தை Threads சமூக ஊடகத்தில் @miezaid என்பவர் பகிர்ந்துள்ளார்.
ஆசிரியர் போதிக்கும் போதே அவருக்கு மரியாதை தராமல் டிக்டோக்கில் விளையாடுவது ஒருபுமிருக்க, நேரலையில் அம்மாணவி பயன்படுத்திய மோசமான வார்த்தைகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.
“நாம் பெருமைப்பட வேண்டிய தலைமுறை இதுதானா? மாணவர்கள் பள்ளிக்கு கைப்பேசிகளை கொண்டு வந்து பாடங்களின் போது நேரலை செய்கிறார்கள். கல்வி அமைச்சு இதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என அந்தப் பயனர் கேட்டுக் கொண்டார்.
அத்தகைய நடத்தையை நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலைத்தளவாசிகளை வலியுறுத்தினார்.
எதிர்பார்த்தபடியே, பல Threads பயனர்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர்.
அம்மாணவிக்கு எதிராக பள்ளியிலிருந்து கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தவறு செய்ததற்கான தெளிவான ஆதாரம் இருந்தால், மாணவியின் முக அடையாளத்தை மறைக்கக் தேவையில்லையே என இன்னொரு பயனர் வாதிட்டார்.
அப்போது தான் பெற்றோருக்கு பிள்ளையின் லட்சணம் தெரியும் என அவர் குறிப்பிட்டது, ஏராளமானோரின் ‘likes’ -களைப் பெற்று வருகிறது.



