Latestஉலகம்

வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்காளதேச தேசியவாதக் கட்சி வரலாற்று வெற்றி

வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்காளதேச தேசியவாதக் கட்சி வரலாற்று வெற்றி

டாக்கா, பிப்ரவரி 13 –

வங்காளதேத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சியான (BNP) கட்சி வெற்றி பெற்றது. 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி BNPகட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறைந்தது 212 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றின .

வங்காளதேச தேசியவாத கட்சி மட்டும் இதற்கு முன் 151 இடங்களை வென்றதாக அறிவக்கப்பட்டது. அக்கட்சி 292 இடங்களில் போட்டியிட்டது. எஞ்சிய தொகுதிகளை வங்காளதேச தேசியவாத கட்சியின் தோழமைக் கட்சிகளும் சிறு கட்சிகளும் வென்றன.

முன்னாள் பிரதமர் கலிடா ஸியா மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான் அவர்களின் புதல்வரான 60 வயதுடைய தாரிக் ரஹ்மான் ( Tarique Rahman ) தலைமையிலான வங்காளதேச தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியின் வழி அந்த தென் ஆசிய நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்காளதேச தேசியவாத கட்சிக்கு கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட Jammat e – Islami கட்சி 42 இடங்களை பெற்று தோல்வி கண்டது. வங்காளதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்தனர்.

நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷேய்க் ஹசினா கடந்த 2024ஆம் ஆண்டு இளைய தலைமுறையினால் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் 50 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சைகள் உட்பட 2,000 த்திற்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!