
லண்டன், மார்ச்-11 – பிரிட்டனின் கிழக்கு யோர்க்க்ஷாயரில் உள்ள வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டாங்கி கப்பலுடன் மோதியதில், பெரும் தீ ஏற்பட்டுள்ளது.
அதில் 32 பேர் காயமடைந்துள்ளனர்; அவர்கள் 3 கப்பல்கள் வாயிலாக கரைக்குக் கொண்டு வரப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டனர்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது பெருந்தீயை அணைப்பதிலும் மீட்புப் பணிகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதற்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எண்ணெய் டாங்கியிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவதும், தீ கொழுந்து விட்டு எரிவதும் வைரலான வீடியோக்களில் தெரிகிறது.
கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவலையும் எழுந்துள்ளது.