
கோலாலம்பூர், செப் 24 – இணக்கத்தின் அடிப்படையில் பாலுறவில் ஈடுபடும் வயது குறைந்த சிறுமிகள் தங்கள் துணைவர்கள் மீது சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தைத் தொடர்ந்து, பாலினத்தைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதன் அமைச்சர் நான்சி சுக்ரி (Nancy Shukri) கூறினார்.
அத்தகைய வழக்குகளில் உள்ள சிறார்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வழிநடத்தப்பட வேண்டும் மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டுமே தவிர தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார் .
ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது வாய்ப்பு தேவை என்றும், முன்னோக்கிச் செல்வதற்கான வழி தண்டனை அல்ல, கவனிப்பு, வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியமாகும்.
சிறார்களாக , அவர்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், மீண்டு வரவும், களங்கம் அல்லது நீண்டகால அதிர்ச்சியால் சுமையாகாமல் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இது பிள்ளையின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பார்வையில் பார்க்கப்பட வேண்டும்.
உணர்ச்சி, அறிவாற்றல், சமூக மற்றும் அதற்கு அப்பால் கவனிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் செயல்களின் விளைவுகளை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் கூறினார்.