
புது டெல்லி, டிசம்பர்-3 – இந்திய ரூபாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அமெரிக்க டாலருக்கு ஏதிராக 90-ரைத் தாண்டியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் இந்த சரிவு பதிவானது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை இந்திய சந்தைகளிலிருந்து திரும்பப் பெற்றதும், அமெரிக்கா-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற நிலை நிலவுவதும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
அதோடு அமெரிக்க டாலர் உலகளவில் வலுவடைந்ததும் ரூபாய் சரிவுக்கு வித்திட்டுள்ளது.
இந்த நிலையற்ற தன்மையை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டாலும், பெரிய மீட்சியை ஏற்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், கச்சா எண்ணெய், மின்னணுவியல் மற்றும் தொழில்துறை பொருட்களின் இறக்குமதி செலவுகளை இந்த ரூபாய் மதிப்பு சரிவு உயர்த்தி விடுமென ஐயுறப்படுகிறது.
தவிர, வெளிநாட்டு கடன்களைக் கொண்ட நிறுவனங்கள், வழக்கத்தை விட அதிகமாக திருப்பிச் செலுத்தும் சுமையை ஏற்படுத்தும்.
ஏற்றுமதியாளர்கள் வேண்டுமானால் பலவீனமான நாணயத்தால் பயனடையலாம்.
ஆனால் ஒட்டுமொத்த பொருளாதார அழுத்தம் அதிகரிக்கும் என்பதே கவலையாக உள்ளது.



