
மோஸ்கோவ், ஆகஸ்ட்-7 – ரஷ்யாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு, மோஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் சடங்குப்பூர்வமான தேசிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாமன்னரை, கிரெம்லின் மாளிகையில் அதிபர் விளாடிமிர் புட்டின் எதிர்கொண்டு வரவேற்றார்.
பரஸ்பர மரியாதையைப் பரிமாறிக் கொண்ட இரு நாட்டுத் தலைவர்களும் பின்னர் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடத்தினர்.
உடன் செல்லும் அமைச்சராக சென்றுள்ள தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டினும் (Datuk Seri Mohd Khaled Nordin) அச்சந்திப்பில் உடனிருந்தார்.
புட்டினின் அழைப்பை ஏற்று மாமன்னர் ஆகஸ்ட் 5 முதல் 10 வரை அந்நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, 1967-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் தூதரக உறவு தொடங்கியது முதல், ரஷ்யாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளும் முதல் மாமன்னர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அரச தந்திர உறவுகளில் மலேசிய மன்னராட்சி முறைக்கு இருக்கும் முக்கியப் பங்கை இப்பயணம் உணர்த்துகிறது.