
கோலாலாம்பூர், பிப்ரவரி-18-சாலைப் போக்குவரத்து துறையான JPJ அலுவலகங்களில் இனி வரிசை எண்களுக்கு வரம்பில்லை; முழு அலுவலக நேரத்திலும் பொது மக்கள் எந்த நேரத்திலும் வரிசை எண்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு வரிசை எண்கள் குறைவாக வழங்கப்பட்டதால், பலர் சேவை முகப்புகளில் சேவையைப் பெற முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சிரமத்தை JPJ கருத்தில் கொண்டு இம்மாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது.
இந்த மாற்றம் சேவை சீராகவும், நெரிசல் குறைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, JPJ தலைமை இயக்குநர் டத்தோ Aedy Fadly Ramli கூறினார்.
முன்பு குறைந்த எண்ணிக்கையில் வரிசை எண்கள் வழங்கப்பட்டது கூட, சேவை முகப்புகள் சீக்கிரமே மூடப்பட்டதால் அல்ல; மாறாக உண்மையான செயல்பாட்டு திறனை அடிப்படையாகக் கொண்டு தினசரி வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டதால் தான் என அவர் விளக்கினார்.
இப்போது அலுவலக நேரம் முழுவதும் வரிசை எண் வழங்கப்படுவதால், பொது மக்கள் தங்கள் நேரத்திற்கு ஏற்ப சேவைகளைப் பெறலாம்.
இது, JPJ, மக்களின் வசதியை முன்னிலைப்படுத்தி, சேவை தரத்தை உயர்த்தும் முயற்சியாகும் என்றார் அவர்.



