
வருமான அளவை கணக்கில் கொள்ளாத BUDI 95 வழிமுறை சிறந்த தீர்வு – அன்வார்
கோலாலம்பூர், பிப்ரவரி 11-
வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களும் அனுபவிக்கக்கூடிய BUDI MADANI 95 (BUDI95) திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோலுக்கான இலக்கு மானியம் சிறந்த தீர்வுக்கான முறையாக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்தார்.
அரசாங்கம் கையாள வேண்டிய நிர்வாக சுணக்கத்தை குறைப்பதுடன், சிறந்த மற்றும் மிகவும் நடைமுறைக்குரிய முறையாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வருமான பதிவுகளின்படி இலக்கு அணுகுமுறைகளுடன் ஒப்பிடும்போது, சம்பந்தப்பட்ட முறை பல சிக்கல்களை மட்டுமே உருவாக்கும் என்றும், RON95 பெட்ரோலை கிட்டத்தட்ட அனைத்து குடிமக்களும் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் இரண்டு விழுக்காடு பயனீட்டாளர் மட்டுமே உள்ளனர் என்பதே உண்மையாகும். இது அவர்களின் வருமானம் மாதத்திற்கு 25,000 ரிங்கிட்டைவிட விட அதிகமாக உள்ளது.
எனவே, குறைந்த வருமானம் கொண்ட குடிமக்களுக்கு மட்டுமே மானியங்கள் வழங்கப்பட்டால், அதிகமான குடிமக்கள் 13,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் குறைவாக சம்பாதிப்பதால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று இன்று மக்களவையில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வில் அன்வார் தெரிவித்தார்.
BUDI95 முறையை நிர்ணயிப்பது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், மலேசிய புள்ளிவிவரத் துறையிலிருந்து வருமானத்தை 13,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவாக நிர்ணயிப்பதற்கான தொடக்கக் கட்ட ஆலோசனை இருந்ததாக கூறினார். இதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்க அல்லது RON95 பெட்ரோலின் விலையை அதிகரிக்காமல் இருக்க முடியும்.
எனினும் 13,000 ரிங்கிட் மதிப்பீடு மிகவும் குறைவாகக் காணப்பட்டதாகவும், எனவே செயல்படுத்தப்பட்டால், அது 13,000 ரிங்கிட்டுக்கும் வருமானம் கொண்ட அதிகமான அரசு ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களைக் கருத்தில் கொண்டு சிக்கல்களை உருவாக்கும் அபாயம் இருந்ததால் அதனை அமைச்சரவை நிராகரித்ததாக அன்வார் தெரிவித்தார்.



