
கோலாலம்பூர், ஜூலை-17- நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான சூழலையும் வசதிகளையும் மேம்படுத்துமாறு, பிரதமர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் வளப்பத்தை உறுதிச் செய்யவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் அது அவசியமென, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மிக முக்கியமாக, மக்களின் நல்வாழ்வே, எப்போதும் வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
2025 IMD உலகப் போட்டித்தன்மைப் பட்டியலில் மலேசியா 11 இடங்கள் முன்னேறியிருப்பதால், நாட்டில் ease of doing business கலாச்சாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
IMD போட்டித்தன்மைப் பட்டியலில் கடந்தாண்டு 34-ஆவது இடத்திலிருந்த மலேசியா, இவ்வாண்டு 23-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் பதிவான மிகச் சிறப்பான அடைவுநிலை இதுவாகும்.
ஊழல் துடைத்தொழிப்பில் அரசாங்கம் காட்டி வரும் தீவிரம் அதற்கு பெரிதும் உதவியிருப்பதாக IMD அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.