Latestசிங்கப்பூர்

வழக்கறிஞர் எம். ரவி மரண வழக்கு: சந்தேக ஆடவன் மீது கூடுதல் போதைப்பொருள் குற்றச்சாட்டு

சிங்கப்பூர், ஜனவரி 2- வழக்கறிஞர் எம். ரவி மரணத்துடன் தொடர்புடைய 40 வயது ஆடவன் மீது மேலும் ஒரு போதைப்பொருள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவன் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள் இரண்டாக உயர்ந்துள்ளன.

கடந்தாண்டு டிசம்பர் சந்தேக ஆடவன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 20,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக, டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை, Upper Boon Keng Road பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற ஒன்று கூடுதல் நிகழ்வில், போதைப்பொருள் பயன்படுத்தப்படும் என்பதை அவ்வாடவன் முன்பே அறிந்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகும் அந்த நிகழ்வு நடைபெற அனுமதித்ததாக, அவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது குற்றவாளிக்கு 20,000 சிங்கப்பூர் டாலர் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே உள்ள நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

56 வயதான எம். ரவி, மனித உரிமை வழக்குகளுக்காக அறியப்பட்ட சிங்கப்பூரின் பிரபல வழக்கறிஞர் ஆவார். அவர் கடந்த, டிசம்பர் 24 ஆம் தேதியன்று, மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். விசாரணையில், சம்பவத்துக்கு முன்னதாக போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், சில போதைப்பொருட்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!