
கோலாலம்பூர் , ஏப் 17 – வாசிக்கும் பழக்கம் குறைந்துவரும் இந்நாளில் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே இப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள ” வாசிப்பை நேசிப்போம் ” என்ற திட்டம் தொடரப்பட வேண்டும் என டத்தோ அன்புமணி பாலன் கேட்டுக்கொண்டார்.
வாசிப்பை நேசிப்போம் திட்டத்தில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நித்திரை என்ற கதைப் புத்தகத்தை வெளியீடு செய்து உரையாற்றியபோது தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அவர்களின் முதன்மை அரசியல் செயலாளருமான அன்புமணி இதனை தெரிவித்தார்.
(பெர்தாமா) எனப்படும் மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையை மற்றும் கோலாலம்பூர் ஜாலான் செராஸ் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக வாசிப்போம் நேசிப்போம் திட்டம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டிருப்பது மிகவும் பயனுள்ள முன்னோடி நடவடிகை என்றும் அவர் கூறினார்.
சிறுவர்களுக்கான இதுபோன்ற கதைப் புத்தகங்களை பெண்கள் அதிகமாக எழுத வேண்டும் என்பதோடு இத்த வேளையில் நித்திரை கதைப் புத்தகம் நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.
இந்த திட்டத்திற்கு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் முழுமையான ஆதரவை வழங்குவார் என்றும் அவர் கூறினார்.ஆசிரியர்கள் முனைவர் நிரோஷா மற்றும் முனைவர் கஸ்தூரி , ஆகியோர் எழுதிய நித்திரை புத்தகத்தில் 61 கதைகள் இடம்பெற்றுளன. இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதைகளும் மாணவர்ளை கவரக்கூடிய வகையில் மிகவும் சுவராஸ்யமாக எழுதப்பட்டுள்ளதாக நிரோஷா தெரிவித்தார்.
இதனிடையே கடந்த காலங்களில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் வாசிப்பை அதிக அளவில் ஊக்குவித்தனர். அந்த அடிப்படையில்தான் தம்மால் பல கவிதைகளை எழுதும் ஆற்றலை பெற்றதாக மலேசிய தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை தலைவர் RRM கிருஷ்ணன் தமதுரையில் தெரிவித்தார்.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தாங்கள் ஊக்குவித்து வருவதாக மலேசிய முன்னாள் தமிழப்பள்ளி மாணவர் பேரவையின் உறுப்பினரான பார்த்திபன் கூறினார்.
தற்போது அற்புதமான கூட்டு முயற்சியில் பழைய மாணவர் சங்கங்களையும் ஒரே இலக்குடன் செயல்பட பெரிதும் ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதோடு கதை சொல்லும் களத்தை உருவாக்கி மாணவர்களின் மொழி ஆறறலை மேம்படுத்தி வருகிறோம் என்றும் பார்த்திபன் சுட்டிக்காட்டினார்.