
தாவாவ், ஆகஸ்ட்-8 – சபாவில் மனைவி பிரசவத்திற்காக மருத்துவனையில் இருந்த போது வீட்டில் 6 வயது மகளை கற்பழித்த தந்தைக்கு, தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மீனவனான 43 வயது அவ்வாடவன், குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.
சிறைவாசம் முடிந்ததும், 3 ஆண்டுகளுக்கு முழு போலீஸ் கண்காணிப்பில் இருப்பதோடு, மனோவியல் ரீதியிலான ஆலோசனைச் சேவைகளைப் பெறுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
2014-ஆம் ஆண்டு செம்போர்னாவில் உள்ள வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஐந்தாவது பிள்ளையை பிரசவிக்க மனைவி மருத்துமனையில் இருந்த போது இந்தக் கொடூரத்தை அவ்வாடவர் புரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.