உலகம்
விக்டோரியா காட்டுத் தீயில் 150,000 ஹெக்டர் காடு எரிந்து, வீடுகள் அழிந்தன; பேரிடர் நிலை அறிவிப்பு

சிட்னி, ஜனவரி-10,
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீ பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சுமார் 150,000 ஹெக்டர் காடு எரிந்துள்ளது.
குறைந்தது 20 வீடுகள் அழிந்துள்ளன;
தவிர, ஒரு குழந்தை உட்பட 3 பேர், அதில் காணாமல் போயுள்ளனர்.
வெப்பநிலை 40 பாகை செல்சியஸை கடந்தததால், பலத்த காற்றுடன் தீ வேகமாக பரவியுள்ளது.
தற்போது 30-க்கும் மேற்பட்ட தீ சம்பவங்கள் விக்டோரியாவில் தொடருகின்றன.
உயிர் காப்பே முக்கியம் என்பதால், விக்டோரியா மாநில முதல்வர் பேரிடர் நிலையை அறிவித்து, மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளார்.
2019–2020 ‘black summer’ அல்லது ‘கருப்புக் கோடை’ காட்டுத் தீக்கு பின், ஆஸ்திரேவியா சந்தித்துள்ள மிகப்பெரிய பேரிடராக இது கருதப்படுகிறது.



