Latestஇந்தியாஉலகம்

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் OTT ஒப்பந்தம் இரத்து, ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை, மார்ச்-13-முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைக்கு வருவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தற்போது டிஜிட்டல் தளத்திலும் அது பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

Amazon Prime Video, சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பிலான OTT ஒப்பந்தத்திலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தெளிவான தகவல் இல்லாததால், இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், விஜக்கு பெரும் இரசிகர் பட்டாளம் இருப்பதால், வெளியீட்டு தேதி உறுதியாகும் போது வேறொரு புதிய டிஜிட்டல் தளம் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!