
லங்கந்வி, அக்டோபர் 23 – லங்காவியில் விடுமுறையைக் கழிக்க வந்த சிலாங்கூரைச் சேர்ந்த 2 இந்திய ஆடவர்கள்
செனாங் கடற்கரையில் துரதிஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் அவ்விருவரையும் பொதுமக்கள் உதவியுடன் கடலிலிருந்து மீட்டதாக லங்காவி துணை மாவட்ட போலீஸ் தலைவர் சாம்சுல்முத்தின் சுலைமான் (Samsulmuddin Sulaiman) தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
தொடக்க கட்ட விசாரணையில், அவ்விருவரும் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக லாங்காவிக்கு வந்திருந்ததாகவும், சம்பவம் நேர்ந்தபோது பொதுமக்கள் பயன்படுத்தும் கடற்கரைப்பகுதியில் நீராடி கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.