Latestமலேசியா

காஜாங்கில் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்த 19 வயது இளைஞரின் காரில் துப்பாக்கி கண்டுப்பிடிப்பு

கோலாலம்பூர், ஜன 22 – காஜாங்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் 12ஆவது
மாயிலிருந்து கீழே விழுந்த 19 வயது இளைஞர் ஒருவர், தனது காரில் துப்பாக்கி வைத்திருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

அந்த நபர் கீழே விழுந்த இடத்தில் கடுமையான காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து இறந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர்
நஸ்ரோன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof )தெரிவித்தார்.

அந்த நபரின் காரில் இருந்த Suit Case பேக்கில் தானியங்கி துப்பாக்கியுடன் தோட்டாவும் இருந்தது.

இதனைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டின் சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் 8 ஆவது விதியின் கீழ் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த நபரின் மரணத்தை திடீர் மரணம் என வகைப்படுத்திய போலீசார் அவரை அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவுவதற்காக விசாரணை அதிகாரி Mohamad Hafeez Hamzah அல்லது அருகேயுள்ள போலீஸ் நிலையதிற்கோ தொடர்பு கொள்ளும்படி Naazron கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!