பெருவில் 9 மில்லியன் ஆண்டுகள் பழமையான வெள்ளை சுறா புதைபடிவம் கண்டுப்பிடிப்பு

லீமா, ஜன 21 – பெருவில் உள்ள பழங்கால ஆராய்ச்சியாளர்கள் திங்களன்று 9 மில்லியன் ஆண்டுகள் பழமையான பெரிய வெள்ளை சுறாவின் புதைபடிவத்தை கண்டுப்பிடித்தனர். அந்த சுறா ஒரு காலத்தில் தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசித்து வந்ததோடு அது சாடின் மீன்களை உட்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. .காஸ்மோபோலிடோடஸ் ஹஸ்டாலிஸின் எனப்படும் ( Cosmopolitodus Hastalis ) வெள்ளை சுறாவின் கிட்டத்தட்ட முழுமையான புதைபடிவமானது லிமாவிற்கு தெற்கே 235 கிமீ தொலைவில் பெருவின் பிஸ்கோ படுகையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பகுதி பழங்கால கடல் இனங்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படும் வெப்பமான பாலைவனப் பகுதியாகும். அந்த சுறா பெரிய வெள்ளை சுறாவின் மூதாதையர் என்று நம்பப்படுகிறது. இது இப்போது அழிந்து விட்டது, ஆனால் அதன் பற்கள் ஒரு காலத்தில் 8.9 செமீ நீளத்தை கொண்டிருந்ததோடு வளர்ந்த வெள்ளை சுறாக்களின் பற்கள் கிட்டத்தட்ட ஏழு மீட்டர் நீளம் வரை இருக்கும் என்பதோடு ஒரு சிறிய படகின் அளவுக்கு இணையானதாக அது இருக்கும் என கூறப்படுகிறது. சுறாவின் எலும்புக்கூடு வழக்கத்தைவிட மிகவும் பெரிதாக இருப்பதை அதன் புதைபடிவம் காட்டியதாக பெருவின் புவியியல் மற்றும் சுரங்க நிறுவனத்தின் (INGEMMET) பொறியாளர் சீசர் அகஸ்டோ சாகல்டானா ( Cesar Augusto Chcaltana ) விளக்கக்காட்சியில் கூறினார். ஆராய்ச்சியாளர்கள் பண்டைய சுறா எலும்புக்கூடுகளை பல கண்ணாடி பெட்டிகளுக்கு முன் வைத்துள்ளனர். அவற்றில் கூர்மையான பற்கள் கொண்ட ஒரு பெரிய தாடை உள்ளது.